Designed by Iniyas LTD
எதிர்வரும் 5 ஆம் திகதி ரெயில் மறியல் போராட்டத்தில் விவசாயிகள்
தமிழக விவசாயிகள் வரும் ஐந்தாம் தேதி நடத்தவுள்ள ரெயில் மறியல் போராட்டத்துக்கு தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. மற்றும் மக்கள் நலக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 
வெள்ளப் பெருக்கினால் பயிர்கள் நாசமடைந்ததையடுத்து தமிழக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்கும் வகையில் விவசாய கடனை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் வருகிற 5-ந் தேதி ரெயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்துக்கு ஏற்கனவே ஆதரவு தெரிவித்திருந்த ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் நேற்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், இந்த ரெயில் மறியல் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., ம.தி.மு.க. மற்றும் மக்கள் நலக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட், கொங்குநாடு ஜனநாயக கட்சி உள்ளிட்ட அமைப்புகள் தெரிவித்துள்ளன.