தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்  சுதந்திரக் கட்சி  சார்பாக மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்  ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி  சார்பாக  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே  வேட்பாளராக  இருப்பார் என  அந்தக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை  வெளிப்படுத்தியுள்ளார்.

எனினும்  இது தொடர்பில்  ஜனாதிபதி தனது முடிவை  அறிவிக்கவில்லையெனவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் ஜனாதிபதி  தேர்தலிற்கு இன்னும் காலம் இருப்பதால் அது தொடர்பாக  குழப்பமடைய தேவையில்லையெனவும்,  முன்னரே தேர்தல் நடக்குமாக இருந்தால் அதில் தற்போதைய ஜனாதிபதியே போட்டியிடுவார் எனவும் தயாசிறி தெரிவித்துள்ளார்.

 

Comments
Loading...