Designed by Iniyas LTD
எனது மகனை மிகக்கொடூரமாக இராணுவத்தினர் கொலை செய்துள்ளதை தற்போது இணையத்தில் பார்த்து அதிர்ச்சியானேன்! காணாமல் ஆக்கப்பட்டவரின் தாய்
இறுதி யுத்தத்தின் போது எனது மகனை இலங்கை இராணுவத்தினர் கொடூரமான முறையில் படுகொலை செய்துள்ளனர் என தாய் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து செயற்பட்ட எனது மகன் இறுதி யுத்தத்தில் காணாமல் போயுள்ளார். பின்னர் அவரை காணவில்லை என்று நாங்கள் தேடிக்கொண்டிருந்தோம்.
இந்த நிலையில் இராணுவத்தினர் எனது மகனை கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட புகைப்படக் காட்சிகள் இணையத்தளங்களில் வெளியாகியது.
இச்சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியடைந்த நான், ஏனைய பிள்ளைகளை பாதுகாப்பதற்காக இன்னும் உயிர்வாழ்கின்றேன்.
மேலும் நான் எனது பிள்ளையை காணவில்லை என்று கூறியே தற்பொழுதும் தேடிக்கொண்டிருக்கின்றேன்.
அதற்கு காரணம் காணமல்போன எனது பிள்ளையை அரசாங்கம் கண்டறிந்து தர வேண்டும் அல்லது எனது பிள்ளையை நாங்கள் தான் கொலை செய்தோம் என்று இராணுவத்தினர் பொறுப்பு கூற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.