தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

எமது நிலம் எமக்கு வேண்டும்! ஆறாவது நாளாக தொடரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம்

downloadமுல்லைத்தீவு கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் ஆறாவது நாளாக இன்றையதினமும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

84 குடும்பங்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்றைய தினம் கேப்பாபுலவிற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் மக்களின் போராட்டம் நியாயமானது எனவும் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்றும் புலவுக்குடியிருப்பு மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மேலும்

download (1)பொதுமக்களின் காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேறுமாறு கோரியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.

இந்த போராட்டம் கடந்த வெள்ளிக்கிழமை முதல் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னாள் இடம்பெற்று வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 49 பொதுமக்களுக்கு சொந்தமான 19 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு தெரிவித்தே, பொதுமக்கள் நேற்று முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபடுபட்டுள்ளனர்.

60 வருடத்திற்கு மேலாக தாம் குறித்த காணிகளில் வசித்து வந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்று மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோது, தமது காணிகளை இராணுவத்தினர், கையகப்படுத்தியிருந்த நிலையில் பல போராட்டங்களை முன்னெடுத்த போதும் இதுவரை தீர்வு முன்வைக்கப்படவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.

Comments
Loading...