தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

எம்.ஜே.அக்பர் லெபனான் சிரியா, ஈராக் நாடுகளுக்கு செல்கிறார்

ஐ.எஸ். தீவிரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி எம்.ஜே.அக்பர் வரும் 17-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை லெபனான் சிரியா, ஈராக் நாடுகளுக்கு செல்கிறார்.External-Affairs

இந்த சுற்றுப்பயணத்தின் போது லெபனான் பிரதமர் தம்மம் சலாம், ஈராக் வெளியுறவுத்துறை மந்திரி மற்றும் சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்தை சந்தித்து மேற்கு ஆசியாவில் தற்போது நிலவி வரும் பதற்றம் மற்றும் தீவிரவாத அச்சுறுத்தல்களை சமாளிப்பது குறித்து விவாதிக்க உள்ளார்.

இதற்கு முன்பு கடந்த 2010-ம் ஆண்டு இந்திய குடியரசுத் தலைவராக இருந்த பிரதீபா பாட்டீல் சிரியாவுக்கு சென்றிருந்தார் என்ற போதிலும், பல ஆண்டுகளுக்கு பிறகு இந்திய தலைவர் ஒருவர் சிரிய அதிபருடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று விவாதிக்க இருப்பது இதுவே முதல்முறையாகும்.  இந்தியாவில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதத்தால் சிலர் ஈர்க்கப்பட்டு வருவது பற்றியும், கடந்த 2014-ம் ஆண்டில் ஈராக்கில் மாயமான 39 இந்தியர்களின் நிலை பற்றியும் இந்த விவாதத்தின் போது பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிரியாவில் நிலவி வரும் உள்நாட்டு போர் விவகாரத்தில் இந்தியா தனது நிலைப்பாட்டில் எப்போதும் உறுதியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...