தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

எல்.ஆர்.சாம் ஏவுகணை இந்திய கடற்படையால் ஆய்வு

இஸ்ரேல் நாட்டின் விண்வெளி ஆய்வக தொழிற்கூடம் (IAI) மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) இணைந்து தயாரித்துள்ள எல்.ஆர்.சாம் ஏவுகணையை இந்திய கடற்படை இன்று சோதனை செய்ய துவங்கியுள்ளது.Israel

பராக் 8 லாங் ரேஞ்ச் சர்பேஸ் ரகத்தை சேர்ந்த இந்த ஏவுகணையில் ஆயுத கட்டுப்பாட்டு தொழில்நுட்பம், எம்.எப்.ஸ்டார் ரக ரேடார், வெர்டிக்கல் லாஞ்சர் யூனிட் மற்றும் டூ-வே டேட்டா லிங்க் ஆகியவை உள்ளன.   இந்த ஏவுகணையை கடந்த மாதம் இஸ்ரேலிய கடற்படை வெற்றிகரமாக சோதனை செய்திருந்தது. இந்நிலையில், தற்போது ஐ.என்.எஸ். கொல்கத்தா போர்க்கப்பலில் இருந்து முதல்முறையாக இந்திய கடற்படை சோதனை செய்ய துவங்கியுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் துவங்கிய இந்த சோதனை இன்றும் தொடரவுள்ளது.   விரைவில் இந்த ஏவுகணையை ஐ.என்.எஸ். கம்ரோடாவிலும் இந்திய கடற்படை நிறுவ உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...