Designed by Iniyas LTD
எழுத்தாளர்கள் விருதுகளை திரும்பப்பெறுமாறு சாகித்ய அகாடமி வேண்டுகோள்
தாத்ரி சம்பவம் உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சாகித்ய அகாடமி விருது பெற்ற 30க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் அவ்விருதினைத் திரும்ப ஒப்படைத்தனர். இது குறித்து சாகித்ய அகாடமி கருத்து எதுவும் தெரிவிக்காததால் அந்த அமைப்பைக் கண்டித்து பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.
மேலும் இந்தச் சூழலில் இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்க சாகித்ய அகாடமி செயற்குழுக் கூட்டம் இன்று டெல்லியில் கூடியது. சாகித்ய அகாடமி தலைவர் விஷ்வநாத் பிரசாத் திவாரி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் எழுத்தாளர்கள் கொல்லப்பட்டதற்கு செயற்குழுவில் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பல்வேறு சம்பவங்களுக்குக் கண்டனம் தெரிவித்து சாகித்ய அகாடமி விருதைத் திருப்பிக் கொடுத்தவர்கள் மீண்டும் விருதினை திரும்பப்பெற வேண்டும் என்று சாகித்ய அகாடமி வேண்டுகோள் விடுத்துள்ளது.