Designed by Iniyas LTD
ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜெர்மனி வீராங்கனை ஏஞ்செலிக் கெர்பர் சாம்பியன்
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனி வீராங்கனை ஏஞ்செலிக் கெர்பர் சாம்பியன் பட்டம் பெற்று முதல் கிராண்ட்சிலாமை கைப்பற்றினார்.
இறுதிப்போட்டியில் 7–ம் நிலை வீராங்கனையான அவர் 6–4, 3–6, 6–3 என்ற செட் கணக்கில் நடப்பு சாம்பியனும், முதல் நிலை வீராங்கனையுமான செரீனா வில்லியம்சை (அமெரிக்கா) அதிர்ச்சிகரமாக வீழ்த்தினார். செரீனாவின் ஆதிக்கத்துக்கு அவர் முடிவு கட்டினார். முதல் கிராண்ட்சிலாம் பட்டம் வென்று தொடர்பாக கெர்பர் நிருபர்களிடம் கூறியதாவது:– இந்த வார காலம் எனக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது.
எனது வாழ்நாள் முழுக்க மிகவும் கடினமாக உழைத்து இருக்கிறேன். கிராண்ட்சிலாம் பட்டம் பெற்றதை என்னால் நம்ப முடியவில்லை. முதல் முறையாக கிராண்ட்சிலாம் பட்டம் வென்றதன் மூலம் எனது கனவு நனவாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றதன் மூலம் கெர்பர் 7–வது இடத்தில் இருந்து 2–வது இடத்துக்கு முன்னேறுகிறார். ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று பிற்பகல் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியனும், முதல் நிலை வீரருமான ஜோகோவிச் (செர்பியா)–இரண்டாம் நிலை வீரர் ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) மோதுகிறார்கள்.