Designed by Iniyas LTD
கடந்த 100 ஆண்டுகளில் முதன்முறையாக ஆப்பிரிக்க வனப்பகுதியில் அபூர்வ கருஞ்சிறுத்தை கண்டுபிடிப்பு…
கடந்த 100 ஆண்டுகளில் முதன்முறையாக ஆப்பிரிக்க காடுகளில் கருஞ்சிறுத்தை இருப்பது படம் பிடிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த வனஉயிரின புகைப்படக் கலைஞரான வில்பரட் லூக்காஸ் என்பவர் கென்யாவின் வனப்பகுதியில் புகைப்படம் எடுத்து வந்துள்ளார்.
அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன் லைக்கெப்பியா ((Laikipia)) என்ற இடத்தில் அரிய மற்றும் அபூர்வ வகையான கருஞ்சிறுத்தை நடமாட்டம் இருப்பதை அறிந்த அவர் குறிப்பிட்ட இடங்களில் தானியங்கி கேமராக்களை பொருத்தியுள்ளார்.
அப்போது பவுர்ணமி வெளிச்சத்தில் கேமராவின் குறுக்கே சென்ற கருஞ்சிறுத்தையை கேமரா படம் பிடித்துள்ளது.
இதேவேளை கடந்த 100 ஆண்டுகளில் ஆப்பிரிக்க வனப்பகுதியில் படம்பிடிக்கப்பட்ட முதல் கருஞ்சிறுத்தை இதுதான் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
