Designed by Iniyas LTD
கட்சியை கலைக்கலாமா? வேண்டாமா?.. – சரத் யோசனை
திருச்செந்துார் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார். இந்நிலையில் நேற்று முன்தினம், சென்னை அச்சரப்பாக்கம் எஸ்.எம்.ஜே., மஹாலில், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள் மற்றும் தொகுதி செயலர்கள் ஆலோசனை கூட்டம் அவரது தலைமையில் நடந்தது.
அக்கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகளிடம், கட்சியை கலைத்து விடுவதா, கட்சியினர் திரட்டி தரும் நிதியுதவி மூலம் தொடர்ந்து நடத்துவதா, பெரிய கட்சியுடன் இணைப்பதா என்ற மூன்று கேள்வி களுக்கு பதிலளிக்கும்படி, கட்சியினரிடம் சரத்குமார் கேட்டுள்ளார். இம்மூன்று கேள்விகள் அடங்கிய வெள்ளை காகிதம், எல்லாருக்கும் வழங்கப்பட்டு உள்ளது. இதில் எதை தேர்வு செய்யலாம் என எழுதி தருமாறு சரத்குமார் கேட்டுள்ளார். அதன் மூலம், கட்சியினர் மத்தியில் ரகசிய ஓட்டெடுப்பை நடத்தி முடித்துள்ளார். பெரும்பான்மையான நிர்வாகிகளின் விருப்பப்படி, உள்ளாட்சி தேர்தலுக்கு முன், அ.தி.மு.க.,வுடன் கட்சியை இணைக்க, சரத்குமார் முடிவு செய்துள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.