Designed by Iniyas LTD
கட்டைக்காட்டில் சிங்கள மீனவர்கள் அத்துமீறல்!
கட்டைக்காடு கடற்கரையில் பாடு தொழிலில் ஈடுபட்ட மீனவர்களின் பிரதேசத்திற்குள் தென்னிலங்கைச் சேர்ந்த அட்டைத் தொழில் அனுமதிபெற்ற தொழிலாளர்கள் அத்துமீறய வகையில் உட் புகுந்தமையினால் பதற்றம் நிலவியது.
குறித்த பகுதியில் அனுமதி பெற்று நீண்டகாலமாக தொழில் புரியும் உள்ளூர் மீனவர்களின் பகுதிக்குள் பெரும் எண்ணிக்கையான படகுகளில் கரையோரப் பிரதேசத்திற்குள் நுளைந்தமையினால் கரைவலைகள் சேதமடைந்ததுடன் தொழிலும் பாதிப்படைந்தது.
இதன்காரணத்தினால் கட்டைக்காட்டு மீனவர்கள் படகுகளில் சென்று அட்டைத் தொழில் புரிந்தவர்களினை கரைக்குத் திருப்பி வந்தனர்.
இதன்போது ஏற்பட்ட கை கலப்பில் கட்டைக்காட்டு மீனவர்கள் சிலர் காயமடைந்த்தோடு மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில். ஒருவர் மேலதிக சிகிச்சையின் பொருட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை கட்டைக்காட்டு கடற்கரைக்கு தென்னிலங்கை மீனவர்களை திசை திருப்பியதனால் கடற்கரைப் பிரதேசத்திற்கு பொலிசார் , மற்றும் படையினரும் விரைந்தனர். அத்துடன் குறத்த பகுதி பிரதேச செயலாளர் மீன்பிடித் திணைக்கள உத்தியோகத்தர் அனைவரும் கரையில. கூடினர்.
இது தொடர்பில் பேச்சுக்களின் பின்னர் தென்னிலங்கை மீனவர்கள் அதே பிரதேசத்தினால் ஊர் திரும்ப அனுமதிக்கப்பட்டபோதும் பாதிக்கப்பட்ட உள்ளூர் மீனவர்களிற்கான இழப்புத் தொடர்பில் எதுவித உறுதியான பதில்களும் வழங்கப்படவில்லை.