Designed by Iniyas LTD
கதவடைப்பு: பொன்.காந்தன்

பலமுறை செய்துள்ளேன்
எங்கள் அப்பாக்கள் அப்பப்பாக்கள் கதவடைத்த நாட்கள் அதிகம்
இன்று கதவடைப்பு
நானும் ஈ காக்கா எறும்பு புகாத கடையை அடைத்துள்ளேன்
சாப்பாட்டுக்கடைகள் எறும்புக்கும் தீனி இல்லாதபடி கதவடைத்துள்ன
இப்பொழுதும் கதவடைத்துள்ளோம்
எங்கள் அடுத்த தலைமுறையை காக்கவேண்டி
கடவுளிடம் நேத்தி வைப்பதுபோல
எங்கள் கைகளில் எதுவும் இல்லை என்பதுபோல
வேலிகள் என்ன செய்கின்றன
வேலிகளும் பயிரை மேய்கின்றன
வேலிகளோடு சேர்ந்தும் பயிர்கள் மேயப்படுகின்றன
வேலிகள் கண்டுகாணாமல் இருக்க பயிர்கள் மேயப்படுகின்றன
வேலிகள் பற்றி பேசினால்
வேலிகளுக்கு எதிராக ஏதாவது செய்தால்
என் வீட்டில் ஒரே இரவில்
கஞ்சா செடிகள் விதைத்து முளைத்து பூத்து
பைகளுக்குள் போய் என் அறையில் இடுக்குகளில் வரக்கூடும்
என் அலுமாரிகளுக்குள் ஆணுறைகள்
பாலியல் படங்கள் நிரம்பி இருக்க கூடும்
அமைதியாய் கதவை அடைத்து விட்டு
இதை எழுதுகின்றேன்.
இப்பொழுது
வண்ணக்கனவு
வந்துபோன சாலையில் துப்பாக்கிகளும்
சுலோகங்களும் வந்துவந்து போகின்றன
என்ன சகுனமாயிருக்கும்!
பொன்.காந்தன்