தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கனடாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ! மக்கள் இடப்பெயர்வு

canadaகன­டாவில் அல்­பேர்ட்டா மாகா­ணத்தில் பரவி வரும் பாரிய காட்டுத் தீ கார­ண­மாக மக்­முர்ரே நகரைச் சேர்ந்த 88,000 மக்­களும் இடம்­பெ­யர நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டுள்ள நிலையில் அந்த மாகா­ணத்தில் அவ­ச­ர­கால நிலை­மை­யொன்று பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.வேக­மாகப் பரவி வரும் இந்தக் காட்டுத் தீயால் அந்த நகரின் பெரும் பகுதி அழி­வ­டை­யலாம் என அதி­கா­ரிகள் எச்­ச­ரித்­துள்­ளனர்.

மேற்­படி எண்ணைத் தன்­மை­யு­டைய மண்ணைக் கொண்ட பிராந்­தி­யத்தில் பரவி வரும் காட்டுத் தீயால் பாட­சா­லை­யொன்று உட்­பட 1,600 க்கு மேற்­பட்ட கட்­ட­டங்கள் தீக்­கி­ரை­யா­கி­யுள்­ளன.

மக்­முர்ரே நகரில் இடம்­பெற்­றுள்ள இடம்­பெ­யர்­வா­னது அல்­பேர்ட்டா பிராந்­திய வர­லாற்றில் இடம்­பெற்ற மாபெரும் இடம்­பெ­யர்­வாக கரு­தப்­ப­டு­கி­றது.

அத்­துடன் அந்தப் பிராந்­தி­யத்­தி­லுள்ள எண்ணெய்க் கம்­ப­னிகள் தமது எண்ணை உற்­பத்­தியைக் குறைக்க வேண்­டிய நிர்ப்­பந்­த­த்திற்­குள்­ளா­கி­யுள்­ளன.

பல எண்ணெய் விநி­யோக கம்­ப­னிகள் தமது எண்ணெய் விநி­யோகக் குழாய்­களை மூடி­யுள்­ளன.

இந்தக் காட்டுத் தீயில் சிக்கி எவரும் உயிரிழந்ததாகவோ அன்றி காயமடைந்ததாகவோ இதுவரை அறிக்கையிடப்படவில்லை.

 

Comments
Loading...