Designed by Iniyas LTD
கலகங்களை அடக்க விசேட படைப்பிரிவு!
சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையில், கலகம் அடக்கும் புதிய பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கண்ணீர் புகைக்குண்டுகளைப் பயன்படுத்தி கலகம் அடக்கும் நடவடிக்கைகளில், ஈடுபடுத்துவதற்காக இந்த சிறப்புப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
கண்ணீர் புகைக்குண்டுகள் மற்றும் வாயுக்களில் இருந்து, பாதுகாப்பளிக்கும் முகத்தை மூடிய கவசங்கள் மற்றும் கவச உடைகள் தாங்கியதாக இந்தப் புதிய படைப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக, கொழும்பில் அதிபர் செயலகம் முன்பாக கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை கலைக்கும் நடவடிக்கையில் இந்த புதிய படைப்பிரிவு ஈடுபடுத்தப்பட்டது.
அதேவேளை நேற்று முன்தினம் காலிமுகத்திடலில் நடந்த சிறிலங்காவின் சுதந்திர நாள் அணிவகுப்பிலும் இந்தப் படைப்பிரிவு பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.