தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காங்கரஸ் கட்சியில் போட்டியிட விரும்பியவர்கள் வேட்பு மனு தாக்கல்

உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவர்களிடம் இன்று விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. இதற்காக மாவட்ட வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.  ved

தென்சென்னை மாவட்டத்தில் மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், விஜய் இளஞ்செழியன், நாகராஜ், எஸ்.வி.ரமணி ஆகியோரும், மத்திய சென்னை மாவட்டத்தில் மாவட்ட தலைவர் ரங்கபாஷ்யம், முன்னாள் எம்.பி.ஆரூண், ராணி ஆகியோரும், வடசென்னை மாவட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் ராயபுரம் மனோ, பீட்டர் அல்போன்ஸ், அருள் அன்பரசு, பாலமுருகன் ஆகியோரும், காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்துக்கு தாம்பரத்தில் மாவட்ட தலைவர் வி.ஆர்.சிவராமன், செல்வ பெருந்தகை, அரும்பாக்கம் வீரபாண்டி ஆகியோர் மனுக்கள் வாங்கினார்கள்.

மாநகராட்சி உறுப்பினர்கள் (பொது) ரூ.2 ஆயிரமும், பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் ஆயிரம் ரூபாயும், நகராட்சி வார்டுகளுக்கு ஆயிரம் ரூபாயும் கட்டணமாக செலுத்தி விருப்பமனுக்கள் கொடுத்தனர்.  தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை முடிந்து காங்கிரசுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்ட பிறகு விருப்ப மனுக்களை பரிசீலனை செய்து வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.

Comments
Loading...