Designed by Iniyas LTD
காங்கேசந்துறை கடற்படையினரால் இந்தியமீனவர்கள் 6 பேர் கைது.
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 6 பேர் காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரைக் கண்டவுடன் குறித்த மீனவர்கள் கடலில் குதித்து , நீரில் மூழ்கிக்கொண்டனர் என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய பதிவு
காங்கேசன்துறை, பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து நேற்றிரவு அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிகப்பட்டுள்ளது.
குறித்த மீனவர்கள் 6 பேரும் தற்போது காங்கேசன்துறை கடற்படைமுகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது..
இதேவேளை, மன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 8 இந்திய மீனவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டமை எ குறிப்பிடத்தக்கது.