Designed by Iniyas LTD
காங்கேசன்துறை கடற்பரப்பில் இருவர் கைது..
காங்கேசன்துறை கடற்பரப்பில் கஞ்சா போதை பொருளை வைத்திருந்த இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் வடமராட்சி கிழக்கை சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்றையதினம் காங்கேசன்துறை கடற்பரப்பில் கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோதே சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகை மறித்து சோதனையிட்ட போதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதோடு அவர்கள் இருந்த படகில் இருந்து 28 கிலோ கஞ்சாவையும் கடற்படையினர் மீட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட இருவரையும் , மீட்கப்பட்ட கஞ்சா போதை பொருளையும் காங்கேசன்துறை பொலிஸாரிடம் நேற்றிரவு கடற்படையினர் ஒப்படைத்துள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
