தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காணமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக ஜயன்கன்குளத்தில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டியும் ,ஜெனிவா மனித உரிமைகள் சபை அமர்வை முன்னிறுத்தியும் வடகிழக்கு பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் திங்கட்கிழமை கிளிநொச்சி கந்தசாமி ஆலய முன்றலில் திரண்டு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது .

இந்த போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக போக்குவரத்து வசதிகள் அற்ற பிரதேசமான முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட ஜயன்கன்குள கிராம மக்கள் தமது கிராமத்தில் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர் .கிராமத்தின் கடைகள் அனைத்தையும் மூடி அவர்களது கிராமத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

Comments
Loading...