தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான 30.08.2021 அன்று உலகமெங்கும் புலம்பெயர் தமிழர்கள் தங்கள் உறவுகளுக்கு நீதி வேண்டி கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர். தாயகத்தில் ஸ்ரீலங்கா அரசின் கடுமையான கெடுபிடிகளால் வீடுகளுக்குள்ளே மக்கள் காணொளி வாயிலாக போராட்டத்தினை மேற்கொண்டனர்.

அந்தவகையில் பிரித்தானியாவில் லண்டன் மாநகரில் புலம்பெயர் உறவுகள், காணாமல் ஆக்கப்பட்ட  உறவுகளுக்கு நீதி வேண்டி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர். நாடுகடந்த தமிழீழ அரசால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான தமிழ் உறவுகள் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கையில் நடந்த  விடுதலைப்போராட்டத்தின் போது ஸ்ரீலங்கா அரசினால் கைது செய்யப்பட்டு பல்லாயிரம் தமிழர்கள் காணாமல் போயுள்ளதை சர்வதேச மனிதவுரிமைகள் அமைப்பு உறுதி  செய்தபோதும்  இன்று வரை எந்த தீர்வும் கிடைக்காமல் இருப்பது மிகவும் வேதனையான விடயமாகும்.

Comments
Loading...