Designed by Iniyas LTD
காணி சுவீகரிப்பு தொடர்கிறது!
வலி. வடக்கு சேந்தான் குளம் தேவாலயத்திற்கு அருகில் உள்ள காணியை கடற்படையினரின் தேவைக்கு சுவீகரிப்பதற்காக காணியினை அளவீடு செய்யும் பணி இடம்பெறவுள்ளது.
நில அளவை திணைக்களத்தால் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு காணி அளவீடு செய்யும் பணி முன்னேடுக்கப்படவுள்ளது.
தொடர்புடைய பதிவு
கடந்த ஆட்சி காலத்தின் போது குறித்த நிலத்தினை சுவீகரிப்பதற்காக அளவீட்டு பணிகளை முன்னெடுக்கப்பட்ட போது மக்களின் கடும் எதிர்ப்பினால் காணி அளவீடு செய்யும் பணிகள் இடை நிறுத்தப்பட்டு இருந்தன.
தற்பொழுது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் மீண்டும் குறித்த காணியினை சுவீகரிப்பதற்காக அளவீடு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
