தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காஷ்மீர் எல்லையில் பாக் இராணுவம் தொடர் தாக்குதல்!

3-pakistan-soldiers-killed-in-indian-retaliatory-firing-army-615x330-450x241ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் பெண் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், உயிரிழப்புகள் அனைத்தும் நாக்யால் பகுதிகளின் கிராமங்களில் நிகழ்ந்துள்ளது. இந்திய ராணுவம் கடந்த சில நாட்களாக  தாக்குதல் நடத்தி வருவதால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், நாக்யால், ஜன்ரோட் மற்றும் கேல் ஆகிய பகுதிகளில் மீண்டும் இந்திய ராணுவம் தாக்குதலை நடத்தியுள்ளது எனவும், இந்தியாவின் தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கப்படுவதாக பாகிஸ்தான் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Comments
Loading...