தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிங்ஸ் லெவன் பஞ்சாபிற்கு எதிராக புனே டாஸ் வென்று பீல்டிங் தேர்வு!

ஐ.பி.எல். தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடக்கின்றன. முதல் போட்டி புனேவில் மாலை நான்கு மணிக்கு தொடங்குகிறது. இதில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் புனே அணி கேப்டன் ஸ்மித் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளார்.

புனே அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் மோர்கன், ஸ்வாப்னில் சிங் ஆகியயோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புனே அணி:- 1. ரகானே, 2. திரிபாதி, 3. ஸ்மித், 4. திவாரி, 5. பென் ஸ்டோக்ஸ், 6. டோனி, 7. கிறிஸ்டியன், 8. வாஷிங்டன் சுந்தர், 9. உனத் கட், 10. ஆடம் சம்பா, 11. ஷர்துல் தாகூர்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி:- 1. மார்ட்டின் கப்தில், 2. சகா, 3. மேக்ஸ்வெல், 4. ஷேன் மார்ஷ், 5. மோர்கன், 6. பார்தீவ் பட்டேல், 7. டெவாட்டியா, 8. ஸ்வாப்னில் சிங், 9. மோகித் ஷர்மா, 10. சந்தீப் ஷர்மா, 11. இசாந்த் ஷர்மா.

Comments
Loading...