Designed by Iniyas LTD
கிளாலியில் வெடி விபத்து – ஒருவர் பலி ஒருவர் காயம்
கிளாலியில் நேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் ஒன்றில் முன்னாள் போராளி ஒருவர் உயிரிழந்தாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மீன்பிடிப்பதற்காக, போரில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்களைத் தேடிச் சென்ற போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, கிளாலிப்பகுதியில் மாடுபார்க்கச்சென்ற எட்டுப்பிள்ளைகளின் தந்தை ஒருவரே வெடிபொருளில் சிக்கி உயிரிழந்தார் என்றும் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காணாமல் போன மாடுகளைத் தேடி சென்றபோதே இவர்கள் வெடிபொருளில் சிக்கியதாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்தில், அறத்திநகர் கிளாலியைச் சேர்ந்த எட்டுப்பிள்ளைகளின் தந்தையான கருப்பையா ராஜா என்பவரே உயிரிழந்துள்ளார். 34 வயதுடைய பாலசுப்பிரமணியம் சுகிர்ஜன் என்ற ஒரு பிள்ளையின் தந்தை படுகாயமடைந்த நிலையில் யாழ் போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.