Designed by Iniyas LTD
கிளிநொச்சியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வான் ஒன்று விபத்து – 7 பேர் படுகாயம்…
கிளிநொச்சியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
சிலாபம் – கொழும்பு வீதியின் மாதம்பை பழைய நகரத்தில் இன்று அதிகாலையில் விபத்து இடம்பெற்றுள்ளது.
இரண்டு வான்கள் ஒன்றோடு ஒன்று மோதியமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் காயமடைந்தவர்களில் 4 பேர் கிளிநொச்சியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.