Designed by Iniyas LTD
கிளிநொச்சியில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்களின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு..!!
கடந்த மாதம் 17ஆம் திகதி விநாயகபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பாலியல் தொழில் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து குறித்த வீட்டை பொலிஸார் முற்றுகையிட்ட போது இதிலிருந்த 4 பெண்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களில் மூவர் நேற்று கிளிநொச்சி நீதிவான் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
மேலும் ஒருவர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
குறித்த 4 பெண்களின் இரத்த மாதிரிகள் சட்டமருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றன என்று பொலிஸார் மன்றில் குறிப்பிட்டனர்.
இரத்த மாதிரி பரிசோதனை அறிக்கையை விரைவில் மன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்ட நீதிவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.