Designed by Iniyas LTD
கிளிநொச்சியில் விடுதலைபுலிகளின் பதுங்குகுழியை உடைக்கும் இராணுவம்…
கிளிநொச்சி புன்னைநீராவிப் பகுதியில் காணப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியதாகக் கூறப்படும் நிலக்கீழ் பதுங்குகுழி உடைக்கப்படுகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய தினம் இலங்கை இராணுவத்தினர் அதனை உடைப்பதகவும் தெரியவந்துள்ளது.
நிலத்தின் கீழ் நான்கு பிரிவுகளைக் கொண்ட 14 எஸ்எல்ஜிஎன் படைபிரிவின் கட்டுப்பாட்டில் இருந்த பதுங்குகுழியே இவ்வாறு உடைக்கப்படுகிறது .
கடந்த வருடம் முதல் தெற்கிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் குறித்த பதுங்குகுழியை பார்வையிட்டு வந்த நிலையில், இவ்வருடம் முதல் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இதேவேளை குறித்த நிலக்கீழ் பதுங்குகுழியை உடைக்கும் நடவடிக்கையை புகைப்படம் எடுப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

