தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிழக்கு மாகாண ஆளுனராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா…

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுனராக  எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ். இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில்  தாம்  ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் நியமன பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்கவுள்ளதாக  அவர்  அறிவித்துள்ளார்,

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுனராக பதவியேற்றத பின்னர் அவர் ஊடகங்களிடம் இதனை கூறியுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுனராக ரோஹித போகொல்லாகம பதவி வகித்து வந்த நிலையில், அண்மையில் நாடு முழுவதிலுமுள்ள ஆளுனர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி பணித்திருந்தார்.

இதையடுத்து, அனைத்து ஆளுனர்களும் பதவி விலகியிருந்த நிலையில், இன்று கிழக்கு மாகாண ஆளுனராக  .ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை  அவர்  பதவிவிலகினால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் ஏற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு சாந்த பண்டார நியமிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...