Designed by Iniyas LTD
கிழக்கு மாகாணத்துக்கு புதிய ஆளுநர் ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை..
கிழக்கு மாகாணத்துக்கு புதிய ஆளுநர் ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கோரிக்கையினை ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 பேர் கொண்ட அணி கோரிக்கை விடுத்துள்ளது.
எஸ்.பி. திஸாநாயக்க, டிலான் பெரேரா, திலங்க சுமதிபால ஆகியோரே 16 பேரின் சார்பில் ஜனாதிபதியிடம் மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளதாகவும் தெர்யவந்துள்ளது.
என்றும், இது குறித்து அவர்கள் விரைவில் ஜனாதிபதியை நேரில் சந்திக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்லது.
இலங்கையில் ஈஸ்டர் திருநாளன்று இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுதாக்குதல்களை நடத்திய பயங்கரவாதிகளின் கோட்டையாக காத்தான்குடி விளங்கியுள்ளது.
இந்நிலையில் கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் ஹில்புல்லா பயங்கரவாதிகளிற்கு உதவியிருக்கலாம் என்ற கோணத்தில் தென்னிலங்கை அரசியல் வாதிகள் குற்றம் சுமத்திவருகின்றனர்.
இதன்காரணமாகவே கிழக்கு மாகாணத்துக்கு புதிய ஆளுநர் ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.