Designed by Iniyas LTD
குர்திஸ் மக்களை ஒடுக்க புலிகளை ஒடுக்கிய தந்திரங்கள்

விடுதலைப்புலிகளுக்கெதிராக ஸ்ரீலங்கா அரசு பயன்படுத்திய தந்திரோபாயங்களை துருக்கியும் மேற்கொள்கின்றது.
துருக்கி தனது தென்கிழக்கு மாகாணத்தில் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சிக்கு எதிராக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளில் விடுதலைப்புலிகளிற்கு எதிராக ஸ்ரீலங்கா அரசு பயன்படுத்திய தந்திரோபாயங்களை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
முக்கிய எதிர்கட்சியான குடியரசு மக்கள் கட்சியின் பிரதிதலைவர் சேர்ஜன் டன்ரிகுலு இதனை தெரிவித்துள்ளார். தென்கிழக்கில் உள்ள பல்வேறு பிராந்தியங்களில் 300 நாட்களிற்கு மேல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,இதன் காரணமாக மக்கள் தங்கள் அடிப்படை தேவைகளை கூட பூர்த்திசெய்ய முடியாமல் தடுக்கப்பட்டுள்ளனர்.
துருக்கியில் இடம்பெற்றது போல ஸ்ரீலங்கா அரசு விடுதலைப்புலிகளுடனான பேச்சுவார்த்தைகளை 2006 இல் நிராகரித்தது. புதிதாக தெரிவுசெய்யப்பட்டிருந்த ஸ்ரீலங்காவின் அப்போதைய ஜனாதிபதி ராஜபக்ச முன்னைய பேச்சுக்கள் மூலம் உருவாகிய அனைத்து பலாபலன்களையும் இல்லாமல் செய்தார்,தனது நாட்டை உள்நாட்டு யுத்தத்திற்குள் இட்டுச்சென்றார்,
துருக்கி இன்று குர்திஸ் மக்கள் குறித்து அறிவித்துள்ளது போன்று அனைத்து தமிழர்களும் எதிரிகளாக அறிவிக்கப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.