Designed by Iniyas LTD
கூட்டமைப்புடன் ஒத்துபோகாததால் வட-முதல்வரை வெளியேற்ற திட்டம்?
எதிர்வரும் வடமாகாண சபைக்கான தேர்தலின் போது, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு, வேட்புமனுவை வழங்காமல் விடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டார தகவல் தெரிவித்துள்ளது என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சி.வி.விக்னேஸ்வரனுக்குப் பதிலாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறப்பினர் எஸ். ஸ்ரீதரனை நிறுத்துவதற்கு,அக்கூட்டமைப்பு ஆலோசித்து வருவதாகவும் அறியமுடிகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டி, வடமாகாண முதலமைச்சராக தெரிவுசெய்யப்பட்ட சி.வி.விக்னேஸ்வரன், கட்சியின் கொள்கையை பின்பற்றாது, தனிப்பட்ட ரீதியில் செயற்படுவதாக, குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே, இவ்வாறான தகவல் கசிந்துள்ளது.
இதேவேளை, கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய ஆகிய மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள், இவ்வாண்டு நடைபெறும் என்று அதிகாரிகள் தன்னிடம் தெரிவித்ததாக, மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய, கடந்த 7ஆம் திகதியன்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.