தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கேப்பாபுலவு காணிகளை விட்டு வெளியேற இராணுவத்திற்கு 48 மில்லியன் நிதி??

கேப்­பா­பி­ல­வில் உள்ள மக்­க­ளின் காணி­க­ளில் இருந்து வெளி­யே­று­வ­தற்­காக இரா­ணு­வத்துக்கு மேலும் 48 மில்­லி­யன் ரூபாவை வழங்க ஸ்ரீலங்கா அமைச்­சர் சுவா­மி­ நா­த­னின் மீள்­கு­டி­யேற்ற அமைச்சு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.

ஏற்­க­னவே வழங்­கப்­பட்ட பணத்துக்குக் காடு மண்­டிய காணி­யையே இரா­ணு­வம் விடு­வித்­த­தாக மக்­கள் குற்­றஞ்­சாட்­டி­வ­ரும் நிலை­யில் மீண்­டும் இந்த நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது.

மேலும் 111 ஏக்­கர் காணி­களை விடு­விப்­ப­தற்­காக இந்த நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது என்று அமைச்சு தெரி­வித்­தது.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் கேப்­பா­பி­ல­வில் மக்­கள் காணி­க­ளில் இரா­ணு­வத்­தி­னர் நிலை கொண்­டுள்­ள­னர்.

காணி­களை விடு­விப்­ப­தா­னால் அதி­லுள்ள தமது முகாம்­களை இட­மாற்ற நிதி தேவை என்று நிபந்­தனை விதித்து வரு­கின்­ற­னர்.

இத­னால் மீள்­கு­டி­யேற்ற அமைச்சு ஏற்­க­னவே 5 மில்­லி­யன் ரூபா நிதியை வழங்­கி­யி­ருந்­தது. இதனை அடுத்து 180 ஏக்­கர் காணி­களை விடு­வித்­த­னர்.

மக்­கள் குடி­யி­ருப்பு இல்­லாத காடு­களே அவ்­வாறு விடு­விக்­கப்­பட்­டி­ருந்­தன. எஞ்­சிய 111 ஏக்­கர் காணி­க­ளை­யும் விடு­விப்­ப­தற்­காக இரா­ணு­வத்­துக்கு 48 மில்­லி­யன் ரூபாவை வழங்­கும் அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரத்தை மீள்­கு­டி­யேற்ற அமைச்சு விரை­வில் அமைச்­ச­ர­வை­யின் முன் வைக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

Comments
Loading...