Designed by Iniyas LTD
கேரள வெடிவிபத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் – உயர்நீதிமன்றம் கருத்து
கேரளாவில் புட்டிங்கல் கோயிலில் நிகழ்ந்த வெடிவிபத்து தொடர்பாக 13 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவர்களில் கோயில் நிர்வாகிகள் 7 பேர் அடங்குவர். இதற்கிடையில் வெடிவிபத்து தொடர்பான மனு ஒன்றை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள், இது தொடர்பான வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
கோயிலில் அனுமதி இல்லாமல் வாணவேடிக்கை நடந்ததாக கூறும் கேரள காவல் துறை ஏன் அதை தடுத்து நிறுத்தவில்லை என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கிடையில் கேரள கோயில்களில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கவேண்டும் என கோரிக்கைகள் வந்துள்ள நிலையில் இது குறித்து நாளை மறுநாள் அனைத்துக் கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.