தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கொக்குதொடுவாயில் சிங்களவர்களின் சட்டவிரோத மின்சார கம்பியில் சிக்கி தமிழ் குடும்பஸ்தர் உயிரிழப்பு…

முல்லைத்தீவு   கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறிய குடியேற்றவாசிகளான சிங்களவர்களின் சட்டவிரோத மின்சார கம்பியில் சிக்கி கொக்குத்தொடுவாயினை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர்  நேற்றையதினம்  உயிரிழந்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் மத்தி நாயடிச்ச முறிப்பு வயல்வெளியில் வயல் செய்த விவசாயியான 42 அகவையுடைய கனகையா உதயகுமார் என்பரே இவ்வாறு  உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

குறித்த நபர் வயல் காவலலுக்காக சென்று  இரவு வரை வீடு திரும்பாத நிலையில், அவரை  உறவினர்கள் தேடியதோடு , முல்லைத்தீவு பொலீஸ் நிலைத்தில்   முறைப்பாடும் செய்துள்ளார்கள்.

இன்னிலையில் பிரதேச மக்கள்இஇளைஞர்கள் இணைந்து தேடியம் அவரை காணாத நிலையில் படையினரின் உதவியுடன் பிரதேச இளைஞர்களும் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்போது குறித்த குடும்பஸ்தர்  மினாசார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சட்டவிரோ குடியேற்ற வாசிகளான சிங்கள இனத்தவர்கள் குறித்த வயல் காணிப்பகுதியில் சட்டவிரோ கம்பியில் மின்சாரம் பாய்ச்சியுள்ளார்கள்

அதில் சிக்குண்டே இவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...