தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கொழும்பு வந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ்

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் நேற்றுமாலை கொழும்பை வந்தடைந்துள்ளார். கொழும்பில் இன்று ஆரம்பமாகும் இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கில் பங்கேற்கவே அவர் சிறிலங்கா வந்துள்ளார்.

இந்தியாவின் தொடருந்து துறை அமைச்சர் சுரேஸ் பிரபு, இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட குழுவினரும், சுஸ்மா ஸ்வராஜூடன் கொழும்பு வந்துள்ளனர்.

இவர்கள் அலரி மாளிகையில் இன்றும் நாளையும் நடக்கும் இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கில் பங்கேற்கவுள்ளனர்.

அதேவேளை, இந்தக் கருத்தரங்கில் பங்கேற்க சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணனும், நேற்று மாலை கொழும்பு வந்துள்ளார்.

இதனிடையே, கொழும்பு வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜை சந்திப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments
Loading...