தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த உள்நாட்டு மீனவர்கள் கைது

அம்பாறை – கல்முனை கரையோரப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி பயிற்சியில் ஈடுபட்டிருந்த 29 உள்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.S_lankan-navy

தென்கிழக்கு பகுதியில் உள்ள ஒலுவில் உப கடற்படைப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இருந்து 2 கண்ணாடி இழைப் படகுகள், 4 கட்டுமரக் கப்பல்கள், 33 ஒட்சிஜன் சிலின்டர்கள், ஒரு நாள் மீன்பிடி படகு, பல நாள் மீன்பிடி படகு மற்றும் 10 முகமூடிகள் ஆகியன மீட்கப்பட்டுள்ளதுடன், இவை கடற்படைத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விசாரணைகளை மேற்கொள்வதற்காக அட்டாளைச்சேனை மீன்பிடித்துறை பரிசோதகரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

Comments
Loading...