தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சட்டவிரோத வர்த்தகங்களில் ஈடுபட்ட 10 பேர் யாழில் கைது

யாழ்ப்பாணம் பிரதேசத்தில் போதைப் பொருள் விற்பனை உட்பட பல்வேறு சட்டவிரோத வர்த்தகங்களில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.arres

ஒரு வார காலமாக மேற்கொண்ட தேடுதலில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களில் 7 பேர் போதைப் பொருள் விற்பனையுடன் சம்பந்தப்பட்டவர்கள் எனவும் மூன்று பேர் சட்டவிரோத மணல் விற்பனையில் ஈடுபட்டவர்கள் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். மேலும் மது அருந்தி விட்டு வாகனத்தை ஓட்டிய 6 சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை தவிர பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டிருந்த 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Comments
Loading...