தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில், அர்ஜென்டினா அணி வெற்றி

சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில், அர்ஜென்டினா அணி 4–2 என்ற கோல் கணக்கில், ‘உலக சாம்பியன்’ ஜெர்மனியை தோற்கடித்து, பதிலடி கொடுத்தது.argentina-s-players-pose

ஜெர்மனியில் உள்ள டசல்டர்ப் நகரில், ‘நடப்பு உலக சாம்பியன்’ ஜெர்மனி, அர்ஜென்டினா அணிகள் மோதிய நட்பு ரீதியிலான சர்வதேச கால்பந்து போட்டி நடந்தது. இப்போட்டியில் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி, காயம் காரணமாக விளையாடவில்லை.

பரபரப்பான இப்போட்டியில் அபாரமாக ஆடிய அர்ஜென்டினா அணி, ஆட்ட முடிவில் 4–2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அர்ஜென்டினா சார்பில் செர்ஜியோ அகுய்ரோ (20வது நிமிடம்), எரிக் லமேலா (40வது), பெடரிகோ பெர்ணான்டஸ் (47வது), ஏஞ்சல் டி மரியா (50வது) தலா ஒரு கோல் அடித்து நம்பிக்கை அளித்தனர். ஜெர்மனி அணிக்கு ஆன்ட்ரி சுருல் (52வது நிமிடம்), மரியோ கோட்சா (78வது) தலா ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தனர்.

இந்த வெற்றியின் மூலம், சமீபத்தில் பிரேசிலில் நடந்த உலக கோப்பை தொடரின் பைனலில், ஜெர்மனியிடம் கண்ட தோல்விக்கு அர்ஜென்டினா அணி பதிலடி கொடுத்தது.

இங்கிலாந்து வெற்றி:

லண்டனில் நடந்த நட்பு போட்டியில், இங்கிலாந்து, நார்வே அணிகள் மோதின. இப்போட்டியில் கேப்டன் ரூனே 68வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து கைகொடுக்க, இங்கிலாந்து அணி 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Comments
Loading...