Designed by Iniyas LTD
சஹ்ரானின் கணனியில் சிக்கிய ஐ.எஸ். அமைப்பு உறுப்பினர்கள் 60 பேரின் விபரங்கள்…

ஐ.எஸ்.ஐ.எஸ். இஸ்லாமிய அரசு அமைப்பின் இலங்கை உறுப்பினர்கள் மற்றும் அந்த அமைப்பின் வலையமைப்புடன் தொடர்புகளை கொண்டிருந்த 60 பேர் தொடர்பான சகல தகவல்களையும் பொலிஸார் கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா பிரதேசத்தில் மொஹமட் சஹ்ரான் ஹசிம் நடத்தி வந்த பயிற்சி நிலையத்தில் அண்மையில் கைப்பற்றிய கணனியில் இருந்து இந்த தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது.
குறித்த கணனியில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் இலங்கை உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் இருக்கலாம் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இதேவேளை பெயர் பட்டியலில் இருந்த முக்கிய உறுப்பினர் ஒருவரை பொலிஸார் பிபிலை பிரதேசத்தில் நேற்று கைது செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 4 ஆம் திகதி கைது செய்த நபரின் பெயரும் குறித்த பட்டியலில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.