தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சஹ்ரானின் புகைப்படத்தை கையடக்க தொலைபேசியில் வைத்திருந்த 8 இளைஞர்கள் கைது ..

சஹ்ரானின் புகைப்படத்தை கையடக்க தொலைபேசியில் வைத்திருந்த சந்தேகத்தில் எட்டு இளைஞர்கள் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் விசேட அதிரடிப் படையினரினால் தங்கவேலாயுதபுரம் சந்தியில் இடம்பெற்ற சோதனைச் சாவடியில் வான் ஒன்றில் பயணித்த இளைஞர் ஒருவரின் கையடக்க தொலைபேசியில் ஜ.எஸ்.குண்டுதாரி சஹ்ரானின் புகைப்படங்களை வைத்திருந்தார்.

குறித்த எட்டு இளைஞர்களும் இராணுவத்தினரால் நேற்றை தினம் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்காக திருக்கோவில் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்கள் கண்டி, கம்பளை, கதுருவெல, சளவக்கடை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...