Designed by Iniyas LTD
சிங்கப்பூரில் இருந்து சென்ற விமானத்தில் பிறந்த குழந்தை!
சிங்கப்பூரிலிருந்து மியன்மாருக்கு பயணித்த ஜெட்ஸ்டார் விமானத்தில் நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணொருவர் ஆண் குழந்தையைப் பிரசவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த பிரசவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் வியாழக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
அந்த விமானத்திலிருந்த 3 மருத்துவர்களும் விமான ஊழியர்களும் அந்தத் தாய்க்கு குழந்தையை பிரசவிக்க உதவியுள்ளனர். மேற்படி குழந்தை பிரசவத்தையொட்டி அந்தத் தாயாருக்கு 1,000 டொலர் பெறுமதியான குழந்தைகளுக்கான பாவனைப் பொருட்களை அந்த விமான சேவை நிறுவனம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்த விமானம் மியன்மாரின் யங்கொன் விமான நிலையத்தில் தரையிறங்கிய வேளையில் பிறந்த அந்தக் குழந்தைக்கு ஜெட் ஸ்டார் என பெயரிடவுள்ளதாக அதன் தாய் தெரிவித்தார்.