தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிங்கள மீனவர்களின் சட்டவிரோத கடற்தொழிலுக்கு கடற்படையினர் உதவி – மன்னார் மீனவர்கள் விசனம்

மன்னார் மாவட்டத்தில் கடற்பகுதியில் அதிக அளவிலான பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மீனவர்களின் அத்து மீறிய சட்டவிரோத கடற்தொழிலுக்கு கடற்படையினர் உதவி வருவதாக மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.Mannar

குறிப்பாக சுருக்குவலை தடை செய்யப்பட்டுள்ள நிலையில் சிலாவத்துறை, சவுத்பார், மன்னார் பழைய பாலம் அகிய பகுதியில் கடற்படையினரின் ஆதரவுடன் பெரும்பான்மையின மீனவர்கள் சுருக்கு வலை மூலம் மீன்கள் பிடிப்பதாக தெரிவிக்கும் இப் பகுதி மீனவர்கள், இதனை தடுப்பதற்கு எவரும் சட்டரீதியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என விசனம் தெரிவிக்கின்றனர். குறித்த சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அப்பகுதி மீனவர்கள் பெரும்பான்மையின மீனவர்களை போல் தாமும் சுருக்கு வலை மூலம் மீன்பிடியில் ஈடுபட்டால் தமிழ் மீனவர்கள் என்ற பாகுபாடு காரணமாக கடற்படையினர் பக்கச்சார்பாக நடந்து கொள்வதுடன், இவ்வாறு சுருக்கு வலை மூலம் கடற்றொழிலில் ஈடுபடும் தமிழ் மீனவர்களை கைது செய்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் ஒப்படைத்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

நாட்டில் நல்லாட்சி நடைபெற்று வரும் நிலையில் சட்டவிரோத கடற்றொழிலுக்கு ஆதரவளிக்கும் கடற்படையினரின் நடவடிக்கை நாட்டில் சிங்களவருக்கு ஒரு நீதியும் தமிழருக்கு வேறு நிதியுமா? கேள்வி எழுப்பியுள்ளனர். சிங்கள மீனவர்கள் குறித்த சுருக்குவலையினை பாவித்து மீன்பிடிப்பதை தடை செய்ய வேண்டும் அல்லது எம்மையும் சுருக்குவலை மூலம் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும். ஆனால் சிங்கள மீனவர்களை சுருக்குவலை மூலம் மீன்பிடிக்க அனுமதிக்கும் கடற்படையினர் தமிழ் மீனவர்களாகிய நாம் மீன்பிடிக்கும்போது அதனை தடை செய்வது நியாயமற்ற செயல் என சுட்டிக்காட்டுகின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அதற்கான தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும் என பாதீக்கப்பட்ட மீனவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Comments
Loading...