தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சின்னமலை முதல் விமானநிலையம் வரை மெட்ரோ ரயில்

சென்னை சின்னமலை முதல் விமானநிலையம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு அடுத்த மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான சேவை துவங்கும் என நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.   மானிய கோரிக்கை மீதான இன்றைய விவாதத்தில் பங்கேற்று பேசிய பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் குறித்து கேள்வி எழுப்பினார்.  rain

இதற்கு பதில் அளித்துப் பேசிய நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், மெட்ரோ ரயில் திட்டத்தில் சின்னமலை முதல் விமானநிலையம் வரையிலும், ஆலந்தூர் முதல் தோமையார் மலை வரையிலுமான மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு அடுத்த மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் என தெரிவித்தார்.  மேலும் நிலத்தின் அடியில் இயக்கப்பட உள்ள வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை அடுத்தாண்டு இறுதிக்குள் தொடங்கும் என்றும் நிதியமைச்சர் பன்னீர் செல்வம் கூறினார்.

தமிழ்நாடு நிதிநிலை நிர்வாகத்தில் பொறுப்புடைமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான சட்ட முன்வடிவை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.   மாநிலத்தில் நிலவும் வருவாய்ப் பற்றாக்குறையை நீக்குவதற்கான கால அளவை நீட்டிப்பு செய்யும் பொருட்டு, 2003ம் ஆண்டு இயற்றப்பட்ட நிதிநிலை நிர்வாக பொறுப்புடைமைச் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும், தமிழ் இசை கல்லூரி மற்றும் சத்குரு சங்கீத வித்யாலயம் ஆகிய இரண்டு கல்லூரிகளையும் தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைகழகத்துடன் இணைப்பதற்கான சட்டத் திருத்த மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமசந்திரன் இதனை தாக்கல் செய்தார்.

Comments
Loading...