Designed by Iniyas LTD
சிறீலங்கா படையில் தமிழ்பெண்களை இணைத்து தமிழர்தாயகத்தை கலப்பினமாக்க திட்டம்.

சிறீலங்கா படையில் பெண்கள் படையணிக்கு தமிழர் தாயகத்தைச் சேர்ந்த மேலும் 44 தமிழ்பெண்கள் இணைக்கப்பட்டுள்ளதாக அரசதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இவர்களில் 20 பேர் முல்லைத்தீவையும், ஏனைய 24பேரும் புதுக்குடியிருப்பையும் சேர்ந்தவர்கள் என சிறீலங்கா படையினர் தெரிவிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. .
இதேவேளை வடக்கின் குறிப்பாக வன்னிப் பிரதேசத்தின் தமிழ்ப் பெண்களை சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு இலக்கு வைப்பதற்கு காரணம் சிங்கள மயமாக்கல் திட்டத்தின் பிரதான செயற்பாடே என அரசாங்கத்துடன் தொடர்புடைய அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
சிறீலங்கா படையில் இணைக்கப்படும் பெண்கள் காலப்போக்கில் சிங்கள படை சிப்பாய்களை மணம் முடிப்பதற்கான எதிர்வு கூறலாகவே தெரிவிக்கப்படுகிறது.
இந்த கலப்பு திருமணம்மூலம் வன்னிப் பகுதி தவிர்க்க முடியாத சிங்களக் குடியிருப்புக்களை கொண்ட நிலமாக மாறும் அபாய நிலை ஏற்படுவது தவிர்க்கமுடியாததாக இருக்கும். இதனை தமிழ்த் தேசியவாதிகள் சட்ட ரீதியாகவோ, தர்க்க ரீதியாகவோ எதிர்க்க முடியாத நிலை உருவாகும் என்பதும் நிதர்சனமாகும்.
அடுத்த 10 வருடங்களில் தமிழர் தாயகம் குறிப்பாக வன்னி மாவட்டம் தமிழ் சிங்கள கலப்புக் குடும்பங்களை கொண்ட பகுதியாக மாறும் எனவும் சிறீலங்கா அரசாங்கம் இதனையே எதிர்பார்ப்பதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.