Designed by Iniyas LTD
சிறுவர் விவகார அமைச்சின் செயலாளராக இமெல்டா நியமனம்!
இவருக்கான நியமனத்திற்கு கடந்த 27ஆம் திகதி கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதனையடுத்து திருமதி இமெல்டா சுகுமார் நேற்று இராஜாங்க அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
தொடர்புடைய பதிவு
நிர்வாக சேவையில் மூத்த அதிகாரியான இமெல்டா சுகுமார் உலக உணவு திட்டத்தில் அதிகாரியாகவும், சமூக சேவைகள் அமைச்சில் செயலாளராகவும் கடமையாற்றியவர்.
இதனைவிட யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மாவட்ட அரசாங்க அதிபராகவும் இவர் பணியாற்றியிருந்தார்.
மூத்த நிர்வாக அதிகாரியான இமெல்டா சுகுமார் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சுக்கு செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம் வடக்கு, கிழக்கு உட்பட நாடு தழுவிய ரீதியில் அமைச்சின் சேவைகளை விஸ்தரிப்பதற்கு வழி ஏற்பட்டுள்ளது. இதேபோல் வடக்கு, கிழக்கு மக்களுக்கு அமைச்சின் மூலம் இதர சேவைகளை மேற்கொள்வதற்கான சூழலும் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கருத்து தெரிவித்துள்ளார்.
