Designed by Iniyas LTD
சிறையை தகர்க்க திட்டமிட்ட 97 அல்-கொய்தா தீவிரவாதிகள் கைது!
அமெரிக்காவின் பிரபல வால் ஸ்டிரீட் பத்திரிகை நிருபரான டேனியல் பியர்ல் என்பவர் கடந்த 2002-ம் ஆண்டு அல்-கொய்தா தீவிரவாதிகளால் கடத்தி, கொல்லப்பட்டார்.இதையடுத்து, நாடு முழுவதும் அல்-கொய்தா தீவிரவாதிகளை பிடிக்க அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது. இதில் 97 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதாகவும், கைதானவர்களில் அல்-கொய்தா தீவிரவாத இயக்கத் தளபதி பரூக் பாட்டி, லஷ்கர்-இ-ஜாங்வி தீவிரவாத இயக்கத் தளபதிகள் நயீம் புகாரி மற்றும் சபிர் கான் ஆகியோர் பாகிஸ்தானில் உள்ள முக்கிய விமானத்தளங்கள், விமான நிலையங்கள் மற்றும் காவல் நிலையங்களின் மீது பல்வேறு தீவிரவாத தாக்குதல்களுக்கு திட்டமிட்டு, செயல்படுத்தியவர்கள் எனவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன