தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிலாபத்தில் ஸ்டிக்கர்களுடன் கூடிய ஒரு வகை போதைப்பொருள் விற்பனை

சிலாபம் பிரதேச மாணவர்களுக்கு ஸ்டிக்கர்களுடன் கூடிய ஒரு வகை போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தின் பல பாடசாலைகளில் மாணவர்கள் சுயநினைவின்றி இருப்பதை அவதானித்த ஆசிரியர்கள் இதுதொடர்பில் விசாரித்த போது குறித்த மாணவர்கள் வெளிநாட்டு இலட்சனையுடன் காணப்பட்ட சீனி போன்ற ஒரு வகை உணவினை உட்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.pothai

அத்துடன் குறித்த பெக்கட்டில் மாணவர்களை கவரும் வகையில் சிறிய வகை ஸ்டிக்கர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சீனி போன்ற பதார்த்தத்தை உதட்டில் வைத்தவுடனே ஒரு வகை மயக்கம் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிலாபம் நகரின் பல வர்த்தக நிலையங்களில் 20 ரூபாவிற்கு குறித்த போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதேவேளை குறித்த போதைப்பொருளுக்கு சிலாபம் பிரதேசத்தின் பல பாடசாலை மாணவர்கள் அடிமையாகியுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Comments
Loading...