தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சுஸ்மாவின் சிறிலங்கா பயணத்தால் மீனவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் – வாசன்

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் இலங்கைப் பயணம், தமிழக மீனவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் அமைந்திட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-vasan

இலங்கைக்கு 2 நாள் பயணமாக மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சென்றுள்ளார். இந்தப் பயணத்தின்போது, கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்களின் மீன் பிடிக்கும் உரிமையை நிலைநாட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அமைச்சர் எடுக்க வேண்டும். இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையேயான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், இலங்கைச் சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 16 பேரையும் உடனடியாக விடுதலை செய்யவும், இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 69 படகுகளை தமிழக மீனவர்களிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Comments
Loading...