Designed by Iniyas LTD
சூப்பர்-10 ஆட்டத்தில் இந்தியாவும், வங்கதேசமும் பலப்பரிட்சை
உலக கோப்பை டி20 கிரிக்கெட்டின் நாளைய சூப்பர்-10 ஆட்டத்தில் இந்தியாவும், வங்கதேசமும் பலப்பரிட்சை நடத்த உள்ளன.
தொடர்ந்து சொதப்பும் தவானுக்கு பதிலாக, இந்த போட்டியில், அஜிங்ய ரஹானே களமிறக்கப்பட வாய்ப்புள்ளது. சூப்பர்-10 சுற்றில் முதல் போட்டியில் நியூசிலாந்திடம், இந்தியா அதிர்ச்சி தோல்வியடைந்தது. இருப்பினும் 2வது போட்டியில் பாகிஸ்தானை மண்ணை கவ்வ செய்து அபார வெற்றி பெற்றது. வங்கதேசம் அணி, தனது முதல் போட்டியில் பாகிஸ்தானிடமும், 2வது போட்டியில் ஆஸ்திரேலியாவிடமும் தோல்வியடைந்து ஏறத்தாழ, அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டது. எனவே அந்த அணி இந்தியாவுக்கு எதிராக வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.