தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சோமாலியாவில் நிர்கதியாக்கப்பட்ட இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை..

சோமாலியாவில் நிர்கதியாக்கப்பட்ட 12 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகளை இலங்கை வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள செய்திக்குறிப்பு ஒன்றிலேயே  இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழிலாளர் பிரச்சினைகளால் நிர்கதியான குறித்த இலங்கையர்களை மீட்பதற்காக, அடிஸ்அபாபியில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் சர்வதேச குடியேறிகளுக்கான ஒழுங்கமைப்பு என்பவற்றின் ஊடாக, இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

குறித்த இலங்கையகள்  12 பேரும் தற்போது மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் விரைவில் இலங்கைக்கு அழைத்துவரப்பட உள்ளதாக   தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...