தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜனாதிபதியை சந்திப்பதற்கு அனுமதி கோரியுள்ள சபாநாயக்கர்…

நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் ஜனாதிபதியை  சந்திப்பதற்கான அனுமதியை சபாநாயகர் கரு ஜயசூரிய கோரியுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

அதற்கிணங்க சமகால அரசியல் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியும் சபாநாயகரும் இன்று  விசேட சந்திப்பை நடத்த வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே நேற்றைய தினம், 125 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றை கூட்டுமாறு ஜனாதிபதிக்கு சபாநாயகர் கடிதம் மூலமாக அறிவித்திருந்தார்.

அதுமட்டும் அல்லாமல் நேற்றைய தினம்  கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போதும் நாடாளுமன்றை துரிதமாகக் கூட்டுமாறே பிரதானமாக வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று ஜனாதிபதியை சபாநாயகர் சந்தித்தால், இவ்வாரத்திற்குள் நாடாளுமன்றைக் கூட்டுவது தொடர்பில்  வலியுறுத்துவாரென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, நவம்பர் 16ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றம் கூடாது என்றும் 16ஆம் திகதியன்று நாடாளுமன்றம் கூடினாலும் பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டிய தேவை, அரசமைப்பின் பிரகாரம் தமக்கு இல்லை என மைத்திரி – மஹிந்த தரப்பினர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...